21 வயசு பொண்ணு.. 17 வயது சிறுவன்.. வாயை பொத்தி.. சென்னையில்தான் இந்த கொடுமை!
21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் கைதாகி உள்ளான்
சென்னை: 21 வயசு பெண்ணை, 17 வயசு சிறுவன், வாயை பொத்தி முரட்டுத்தனமாக இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் அந்த 21 வயது இளம் பெண்.. இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

வழக்கம்போல வேலையை முடித்து விட்டு இரவு நேரம் வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்... அப்போது திடீரென பின்பக்கமாக வந்த ஒரு நபர் பெண்ணின் வாயை பொத்திவிட்டார்.. அப்போதுதான் தெரிந்தது அது 17 வயது சிறுவன் என்று!
வாயை இறுக்கமாக பொத்தியபடியே, பக்கத்தில் இருந்த ரயில்வே இருப்பு பாதைக்கு இழுத்து சென்றுள்ளார்.. அங்கு வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளான்.
சிறுவன் வாயில் இருந்து கையை எடுத்ததும்தான் அந்த பெண்ணால் கத்தி கூச்சலிட முடிந்தது.. பெண்ணின் கதறலை கேட்டு அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.. அவர்களை பார்த்ததும் சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்... இது குறித்த எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை தேடிப்பிடித்து கைது செய்து மகளிர் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர். சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.. விசாரணையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவராம்.. வயசு 17 என்று சொல்லி உள்ளார். பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றபோது தண்ணி அடித்திருந்தாராம்.
மது போதையில் அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்... இந்த பிள்ளைகளை நினைத்து கவலைப்படுவதா? இவர்களின் பெற்றோர்களை நினைத்து கோபப்படுவதா? என்றே தெரியவில்லை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications