எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோதே.. தூக்கப்பட்ட சிறுபான்மை துணைசெயலாளர்
சென்னை: இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்து விட்டதாக தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் கூறி பேட்டியளித்த சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று கூறி இன்று செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் J.M.பஷீர் அழைப்பு விடுத்து இருந்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க சொல்லி ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கோரிக்கை வைத்து பேட்டி தரப்போவதாகவும் கூறியிருந்தார்,

சந்திப்பு
அவர் சொன்னபடி, இன்று பிற்பகல் 3மணி அளவில் செய்தியாளர்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்தித்தார். அப்போது அவர், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்து விட்டதாக தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டினார்

ஏற்க மறுப்பு
சிஏஏ மசோதாவை எதிர்த்து சட்டசபையில மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சிஏஏ மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கோரியும் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டார் என்று J.M.பஷீர் குற்றம்சாட்டினார்.

பஷீர் நீக்கம்
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே, அதிமுகவின் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் J.M.பஷீர் செய்தியாளருக்கு பேட்டி கொடுத்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

ஓ பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளதாலும, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த திரு. J.M.பஷீர்,(கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்த சூழலில் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி அளித்தது அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications