ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை! அமைச்சர் சிவசங்கர் கூறிய புது தகவல்!
சென்னை: ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் தான், தனியார் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணத்தை தெரிந்தும் முன்பதிவு செய்து செல்வதாக கூறியிருக்கிறார்.
ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது என்றும் அது ஒரு தொழில் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

பண்டிகைக் காலம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என பண்டிகைகள் வரிசை கட்டி வருவதால் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எழிலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என ஒரே போடாக போட்டார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் தான், தனியார் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணத்தை தெரிந்தும் முன்பதிவு செய்து செல்வதாக தெரிவித்தார்.

தொழில் செய்கிறார்கள்
அரசுப் பேருந்துகளை போல் தனியார் ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது என்றும் அவர்கள் தொழில் செய்கிறார்கள் எனவும் கூறினார் அமைச்சர் சிவசங்கர். மேலும், தங்களுக்கும், பயணிப்போருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் கட்டணத் தொகை நிர்ணயித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

கட்டணத்தை குறைக்க
இதனிடையே ஆம்னிப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் தாம் அறிவுறுத்தியிருப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், ஆம்னிப் பேருந்துகளில் செமி ஸ்லீப்பர், ஸ்லீப்பர், ஏசி, மல்டி ஆக்சில் வால்வோ, ஸ்கேனியா என பல விதமான வகைகள் இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க வேண்டியிருப்பதாக உரிமையாளர்கள் தெரிவிப்பதாக கூறினார்.

மக்கள் எதிர்பார்ப்பு
ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்ற அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பண்டிகைகள் நெருங்கி வருவதால் இவ்விவகாரத்தில் அரசு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என சொந்த ஊர்களை விட்டுவிட்டு வெளியூர்களில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications