சர்ச்சையில் அழகி ஷீபா.. ஒரு டாக்டர் இப்படி செய்யலாமா.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
மாஸ்க் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அழகியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
சென்னை: டாக்டரும் சென்னை அழகியுமான ஷீபா மாஸ்க் போடாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாராம்.. இது சம்பந்தமான சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் ஷீபா.. இவர் ஒரு டாக்டர்.. சமூக செயற்பாட்டாளரும்கூட.. பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவர் செய்து வருகிறார்.

தற்போது கொரோனா காலம் என்பதால், இலவச மாஸ்க், சானிடைசர்கள் தருவது என பலவற்றையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஒரு டயாலிசிஸ் சென்டரில் 2 நாளைக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார்.. இதற்கான விழாவும் அந்த சென்டரிலேயே நடந்துள்ளது.. அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாக்டர் ஷீபா மாஸ்க் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. மாஸ்க் போடாமலேயே அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளை சந்தித்துள்ளார்.. அவர்களுக்கு பழங்களை தன் கையாலேயே தந்துள்ளார். இதுதான் விவகாரமாக வெடித்துள்ளது.
அதுபோலவே, அப்துல்கலாம் நினைவு நாளுக்கு ஒரு அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.. அங்கும் அவர் மாஸ்க் இல்லாமல்தான் சென்றாராம்... இப்படி ஷீபா பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் வெளியானதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை எல்லாம் நடத்த அதிகாரிகளின் உத்தரவு கிடைத்ததா? யாரிடம் ஷீபா அனுமதி பெற்றார் என்று பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டை டாக்டர் ஷீபா மறுத்துள்ளார்.. தான் மாஸ்க் அணியாவிட்டாலும், விழாவில் இருந்தவர்கள் அனைவருமே மாஸ்க் அணிந்திருந்தனர் என்று உறுதியாக கூறியுள்ளார். இருந்தாலும், ஒரு டாக்டராக இருந்து கொண்டு, சமூக ஆர்வலாக இருந்து கொண்டு, மாஸ்க் இல்லாமல் போயிருக்க கூடாதுதானே என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications