தலைக்கேறிய உல்லாசம்.. மிஸ்ஸிங் ஏடிஎம் கார்டுகள்.. ஸ்வைப் மிஷினும் இல்லை.. இப்படியும் நடக்குமா?
சென்னை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.. இதோ இப்படியும் நூதன திருட்டு நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன். இவருடைய ஏடிஎம் கார்டு திடீரென்று தொலைந்துவிட்டது.. பிறகு வங்கிக்கணக்கிலிருந்து, 3 தவணைகளாக 12,000 ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் பதறிப்போன கார்த்திக் வேந்தன், சூளைமேடு போலீசுக்கு சென்று புகார் தந்தார்.

புகார்கள்: போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உடனே சூளைமேடு போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் வாசலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றி திரிவதாக சூளைமேடு போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்றனர்.. சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்த நபரை கைது செய்தனர்.

ஆந்திரா: ஸ்ரீவாசலு ரெட்டி என்ற 27 வயது நபர் சிக்கினார்.. இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பகுதியை சேர்ந்த ஸ்ரீவாசலு, ஆந்திராவிலேயே என்ஜினியரிங் படித்தவிட்டு, அம்மாநில தனியார் வாங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.
அப்போது ஏடிஎம் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும், அதிலிருந்து எந்தெந்த வழிகளில் பணம் எடுக்கலாம் என்பது குறித்தெல்லாம் நுணுக்கங்களை தெரிந்து கொண்டுள்ளார்.. பிறகு, அந்த பேங்க் வேலையை உதறித்தள்ளிவிட்டு, ஏடிஎம் மையங்களில் கஸ்டமர்கள் தவறவிடும் கார்டுகளை திருடி, அதன்மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

வைஃபை கார்டுகள்: குறிப்பாக, வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து ஸ்ரீவாசலு திருடியிருக்கிறார்.. அந்த கார்டுகளை, ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தையும் அள்ளியிருக்கிறார்..
இப்படியே திருடி திருடி, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அதாவது மொத்தமாக பணத்தை திருடமாட்டாராம்.. முதலில் 2000 ரூபா முதல் 5000 ரூபாய் வரை சிறுக சிறுக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி: சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இப்போது ஸ்ரீவாசலுவிடமிருந்து மொத்தம் 63 வைஃபை ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்கள, செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த படித்த மேதாவி ஸ்ரீவாசலு மீது ஹைதராபாத்தில் மட்டுமே 11 கேஸ்கள் இருக்கிறதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications