அசிங்க சென்னையாக மாற்றப்படும் சிங்கார சென்னை.. ‘மியாவாக்கி வனம்’ நிலையை பாருங்க.. கொதிக்கும் பாஜக!
சென்னை: சிங்கார சென்னை என்று சொல்லிவிட்டு அசிங்க சென்னையாக மாற்ற முயற்சிக்கும் சில பொறுப்பற்றவர்களை மாநகராட்சி நிர்வாகம் கேள்வி கேட்குமா? என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தை தவிர்க்க ஜப்பானின் அகிரா மியாவாக்கி (Akira Miyawaki) என்ற தாவரவியல் வல்லுநர் இடைவெளி இல்லாமல் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக மரங்கள் வளர்க்கும் முறையை கண்டுபிடித்தார். மியாவாக்கி காடுகள் என அழைக்கப்படும் இந்த முறையில் மரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, விரையில் செழிப்பான காடாக மாறும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை பின்பற்றி அடையாறு மண்டலம் கஸ்தூரிபா காந்தி நகரில் குப்பை மேட்டை மியாவாக்கி வனமாக மாற்றியது சென்னை மாநகராட்சி.

இந்நிலையில், தற்போது அடையாறு கஸ்தூரிபாய் காந்தி நகர் ரயில் நிலையத்திலிருந்து இந்திரா நகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி வனத்தில் குப்பைக் குளங்கள் மண்டிக் காணப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? என்றார் பாரதி. சில வருடங்களுக்கு முன் 'சென்னையில் வனம்' எனும் கருத்தில் சில இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் 'மியாவாக்கி' வனங்களை உருவாக்கியது சென்னை மாநகராட்சி. பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை, செடி, கொடிகளை வளர்த்து சென்னை நகரத்து மையத்தில் அற்புதமான சூழ்நிலையை ஏற்படுத்தியதால், இந்த வனங்களில் அந்தந்த பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை பெரிதும் விரும்புகின்றனர்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? என்றார் பாரதி.
— Narayanan Thirupathy (@narayanantbjp) January 7, 2024
சில வருடங்களுக்கு முன் 'சென்னையில் வனம்' எனும் கருத்தில் சில இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் 'மியாவாக்கி வனங்களை' உருவாக்கியது சென்னை மாநகராட்சி. பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை, செடி, கொடிகளை வளர்த்து சென்னை… pic.twitter.com/QCqrUDjpxt
சமீபத்திய புயலால் பல மரங்கள் வீழ்ந்தும், சில வனங்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும் பொலிவிழந்து போயின. இதை காப்பாற்றி, பராமரிக்க வேண்டிய மாநகராட்சி கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது அடையாறு சென்னை கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்திலிருந்து இந்திராநகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி வனம். இந்த நுழைவாயிலின் முன் குப்பை கூளங்கள், கழிவுகள் உள்ளிட்டவைகளை கொண்டு பெரும் குப்பைக்கிடங்கை மாநகராட்சி உருவாக்கி வருவது அலட்சியம் மட்டுமல்ல, அராஜகமும் கூட.
பல முறை புகார் செய்தும் தொடர்ந்து இந்த அநியாயத்தை சென்னை மாநகராட்சி செய்து வருவது அத்துமீறல். ஒரு நல்ல சூழலை உருவாக்கி விட்டு அதை முறையாக பராமரிக்காமல் சீர்கெடுப்பது சென்னை மாநகராட்சிக்கு கைவந்த கலை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
குப்பைகளை, கழிவுகளை குப்பைக்கிடங்குகளில் கொட்டுவதை விட்டு விட்டு அருகில் இருக்கிறது என்று பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் விட்டு செல்வது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்ற பொது அறிவு இல்லாமல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கார சென்னை என்று சொல்லிவிட்டு அசிங்க சென்னையாக மாற்ற முயற்சிக்கும் சில பொறுப்பற்றவர்களை கேள்வி கேட்குமா மாநகராட்சி நிர்வாகம்? நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? என்று பாரதியார் கூறியது சென்னை மாநகராட்சிக்காகத் தானா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
Marina Rope Car: சென்னை மக்களின் கனவாச்சே.. மெரினா ரோப் கார் திட்டத்தை கைவிட முடிவா? போச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications