கொரோனாவுக்குப் பின் திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்?பாஜகவில் வலுவான பதவியுடன் ஐக்கியமாகிறாரா அழகிரி?
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்துக்குப் பின்னர் திமுகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மு.க. அழகிரியை பாஜகவில் இணைப்பது என்கிற திட்டத்துடன் பாஜக மேலிடம் வியூகம் வகுத்துள்ளதாம்.
கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், நாள்தோறும் வீடியோ காலில் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசுகிறார்.
அதிமுகவில் தற்போதைய கட்டமைப்பை மாற்றி அமைப்பதில் படுதீவிரமாக இருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கான குரல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்கின்றன தகவல்கள். இதேபோல் பாஜகவும் சட்ட்சபை தேர்தலுக்கு பல வியூகங்களை வகுத்து வருகிறது.
தகுதி நீக்கம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புகலிடமான பாஜக
தமிழக பாஜகவைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே பிற கட்சிகளின் வெயிட்டான தலைவர்களின் வருகைக்காக காத்திருக்கிறது. ஆனால் பிற கட்சிகளில் செல்வாக்கை இழந்தவர்களின் புகலிடமாகவே தமிழக பாஜக இருந்து வருகிறது. இதைப்பற்றி எல்லாம் கவலையும் படாமல் அவர்களை அரவணைத்து வருகிறது பாஜக.

வலையில் தப்பிய ரஜினி
அப்படி வருகிறவர்களுக்கு மாநில அமைப்பில் பதவியை கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறது பாஜக. அண்மையி திமுகவில் இருந்து தாவிய விபி துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுத்திருக்கிறது பாஜக. முதலில் ரஜினிக்கு வலைவீசிப் பார்த்தது பாஜக. ஆனால் தமிழகத்தில் பாஜக மீது இருக்கும் அதிருப்தியை உணர்ந்து தனிக்கட்சிதான் என்பதில் ரஜினிகாந்த் திட்டவட்டமாக இருக்கிறார்.

அழகிரிக்கு குறி
இதேபோல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரிக்கும் வலைவீசிக் கொண்டே இருந்தது பாஜக. ஆனால் திமுக தலைமையுடன், குடும்பத்தினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த அழகிரி பாஜகவுக்கு பிடி கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் அழகிரி தரப்புக்கே சலிப்பு தட்டிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.

திமுகவில் லாக்டவுன்
திமுக தலைமையிடம் இருந்து இணக்கமான சிக்னல் வராத சூழ்நிலையில் இனியும் பொறுப்பதில்லை என அழகிரி முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அழகிரியின் ஆதரவாளர்கள், கொரோனாவுக்குப் பின் பாருங்கள்.. என சூசகமாக குறிப்பிடுகின்றனர். ஆனால் திமுக தரப்போ, நிச்சயம் மீண்டும் கட்சியில் அழகிரியை சேர்க்காது தலைமை என்றே சொல்கின்றனர்.

பாஜகவில் அழகிரி?
தமிழகத்தில் இதுவரை அதிரடியான அரசியல் முகத்தை அமித்ஷா காட்டியதும் இல்லை. தற்போது மு.க. அழகிரியை வைத்து அதிரிபுதிரி ஆட்டத்தை அமித்ஷா அரங்கேற்றுவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள். ஆம் கொரோனாவுக்குப் பின் அழகிரி பாஜகவில் இணைவார். அழகிரிக்கு தேசிய அளவில் முக்கியமான பதவியை பாஜக மேலிடம் தரும்.. என்றெல்லாம் பட்டியல் போட்டு அடுக்குகின்றனர் பாஜகவினர்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications