மீண்டும் திமுக ஆட்சி அமைய கூடாதென பாஜக சதி! யார் வந்தாலும் பார்ப்போம்! மா.செ.க்களிடம் ஸ்டாலின் உறுதி
சென்னை: 'SIR' தொடர்பாக சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி காணொலியில் பேசிய மு.க.ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையின் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலியின் மூலம் நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மற்றும் SIR (Special Intensive Revision) குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்களிடையே உரையாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், "மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற வேண்டும். வீட்டு முகவரி மாறியவர்கள், புதிதாக சேர்க்கப்பட வேண்டிய வாக்காளர்கள் ஆகியோரின் பட்டியல்களை துல்லியமாகத் தொகுக்க வேண்டும். தகுதியுள்ள ஒருவரின் பெயரும் தவறாமல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்; அதேபோல் தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்காமல் சேர்க்கக் கூடாது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
தேர்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வரும் "சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்" (SIR) குறித்து அவர் கடும் அதிருப்தி உள்ளது. எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு பிறகு பட்டியல் திருத்தம் செய்யலாம் என வலியுறுத்தியும், அதை ஆணையம் புறக்கணித்துள்ளது. இது பாஜகவின் அழுத்தத்தால் நடக்கும் நடவடிக்கை. சிறுபான்மையினர் மற்றும் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கும் பிரிவினரை குறிவைத்து, அவர்களின் பெயர்களை நீக்கி வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாஜக மீது குற்றச்சாட்டு
அதேபோல், SIR செயல்பாட்டின் போது உள்ள நிலை, குழப்பங்கள், மற்றும் சிறந்த நடைமுறைகள் (Best Practices) குறித்து களத்தில் பணிபுரியும் திமுக நிர்வாகிகளிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டன. சில பகுதிகளில் திமுக BLA2 கள் பணிகளை தொடங்காததற்கான பட்டியல் என்னிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நான் அதை நேரடியாக விசாரித்துள்ளேன். நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என்று சொல்கிறார்கள்.
திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இதனைக் கருத்தில் கொண்டு கட்சி சார்பில் விளக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பூத்திலும் வாக்காளர் பட்டியல் பணிகளை கடுமையாக கண்காணிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். சார் தொடர்பாக முதல் கட்டமாக, திமுக 11-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சீராய்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. அந்த ஆர்ப்பாட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும்," என்று மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications