Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் தீ விபத்து- ஸ்டாலின் 10 லட்சம் நிவாரணம் தந்தது ஏன்? - வெளியே தெரியாத சில உண்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாயில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழக வலாற்றில் அயல்நாட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதே இல்லை. முதன்முறையாக ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

ஆகவே, அயலகத்தில் பணிசெய்துவரும் தமிழர்கள் மத்தியில் இச்செய்தி ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

துபாய் டேராவில் உள்ள அல் ராஸ் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் செயல்பட்டு வந்தது. அதில் இரு தினங்களுக்கு முன்பாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

இவ்விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியுமாகச் சேர்த்து ஆக மொத்தம் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தீ விபத்தில் இறந்த இருவரும் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுர வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம்(43) மற்றும் முகமது ரபீக் (49) என்பது தெரிய வந்தது.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

அதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்துவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் "துபாய் நாட்டில் டேரா பகுதியில் நடைபெற்ற தீவிபத்தில் சிக்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் காசீமும் முகமது ரபீக்கும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த இருவரும் ஏதோ தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததை போலவே இன்றுவரை தமிழ்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

ஆனால், அமீரக ஊடகமான 'khaleej times' தீ விபத்து குறித்து வெளியிட்டுள்ளது. அதில், 'விபத்தில் இறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும் மற்றவர்களை மீட்கும் பணியிலிருந்தபோது துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளது.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

முதல்வர் ஸ்டாலினின் துரித நடவடிக்கைக் குறித்தும் விபத்து குறித்தும் பேசத் துபாயில் உள்ள எஸ்.எஸ். மீரானை தொடர்பு கொண்டோம். இவர் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.

"தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனை. வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு விபத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசும் இழப்பீடாக வழங்கியதில்லை. முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

இதற்கு முன்னால் கேரள அரசு ஒருமுறை அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துபாயில் விபத்தில் இறந்த போது 1 லட்சம் ரூபாய்தான் வழங்கியது. அந்தத் தொகையோடு ஒப்பிடும்போது, ஸ்டாலின் அளித்துள்ள இழப்பீடு பல மடங்கு பெரியது.

அதனால்தான் சொல்கிறேன், ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

அயலக தமிழர்களுக்காக ஒரு நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுக்கால கோரிக்கை. 2011இல் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடரில் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ், கேள்வி எழுப்பினார். அன்றைக்கு முதல்வராக இருந்த மு.கருணாநிதி, 'விரைவில் அமைக்கப்படும்' என்று அறிவித்தார்.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

ஆனால், பின்னால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் 10 ஆண்டுக்காலம் வீணானதுதான் மிச்சம்.

இந்நிலையில்தான் 2017இல் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்திருந்தார். அவரிடம் இதே கோரிக்கையை முன்வைத்தோம். அவர், 'ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக அமைப்போம்' என்றார்.

பொதுவாகச் சொல்லாததையே செய்பவர் முதல்வர் ஸ்டாலின். ஆகவே ஆட்சிக்கு வந்ததும் சொன்னதைப்போலவே அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் பயனாக இன்றைக்கு முதன்முறையாக இரு அயலகத் தொழிலாளிகளின் குடும்பத்தாருக்கு நிவாரணம் போய்ச் சேர்ந்துள்ளது.

இந்தத் துபாய் விபத்து நடந்த உடனேயே முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு எடுத்துச் சென்றோம். அவரிடம் நிவாரணம் சார்ந்து கோரிக்கை வைத்தோம். அவர் எந்த தாமதமும் இல்லாமல் நிவாரணத்தை அளித்துள்ளார்.

 MK Stalin announces ₹10 lakh compensation for kin of 2 people killed in Dubai fire

நான் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசினேன். அவர்கள், "நாங்கள் அரசிடம் கேட்கவே இல்லை. அப்படி இருந்தும் அவர்களே தானாக முன்வந்து நிவாரணம் அளித்துள்ளனர். எங்கள் குடும்பத்திற்கு இந்த நிதி மாபெரும் உதவி" என்று கூறினார்கள்.

இந்த நலவாரியத்தால் இனிவரும் காலங்களில் இவர்களைப்போலப் பலர் பலன்பெறலாம். விபத்தின் போது ஒருவர் திடீரென்று உயிரிழக்கிறார். அவரை நம்பி உள்ள குடும்பம் நிர்கதியாய் நிற்க வேண்டி வரும். இப்படி நிதி உதவி கிடைத்தால், சற்று அவர்களால் சமாளிக்க முடியும். அதற்காகத்தான் நாங்கள் நலவாரியம் கேட்டுப் போராடி வந்தோம்.

அமீரக திமுக 2002இல் இருந்து செயல்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சி சார்பாக நாங்கள் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறோம். சில ஆண்டுகள் முன்பாக தாயை இழந்து துபாயில் தன்னந்தனியாக தவித்த பத்து வயதுக் குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தோம். அது அமைப்பு ரீதியான முயற்சிதான்.

ஆனால், அரசு செய்யும் உதவி என்பது வேறு. அதற்குச் சரியான சான்று அரசு அளித்துள்ள இந்த உதவி. கடந்த பிப்ரவரி மாதம் தான் அயலக தமிழர் நலவாரியக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் பல திட்டங்களை அலசி ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பத்து லட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் முழுமையாக ஆதரவு அளித்துள்ளார்" என்றவரிடம் விபத்து பற்றிக் கேட்டோம்.

"இந்த விபத்தில் இறந்த இருவரும் ஏதோ தீயில் சிக்கித் தெரியாமல் இறக்கவில்லை. தீ விபத்து நடக்கும் போது இவர்கள் தரைதளத்திலிருந்துள்ளனர்.

இது ரமலான் நோம்பு மாதம் என்பதால் பலரும் மதிய நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆகவே தீ விபத்தை அவர்களால் உடனடியாக உணர முடியவில்லை. அதற்குள் தீ பரவி புகையில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காகத்தான் நம் தமிழ்நாடு தொழிலாளிகள் இருவரும் குடியிருப்புக்குள் புகுந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களும் புகைக்குள் சிக்கி இறங்க நேர்ந்துள்ளது. இது ஒரு வீரமரணம். அப்படித்தான் துபாய் பத்திரிகைகள் எழுதி உள்ளனர். 'ரியல் ஹீரோஸ்' இவர்கள் எனப் பலர் செய்தி வெளியிட்டுள்ளனர். நம் கள்ளக்குறிச்சி தொழிலாளிகள் இருவரும் சேர்ந்து அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலரைத் தீயிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்டு உயிரிழந்துள்ளனர். அதுவே உண்மை" என்கிறார் மீரான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+