சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுவரை எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் பொருட்டு ஆயிரம் குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர்," தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை தடுக்கும் பாஜகவின் சதியை முன்கூட்டியே உணர்ந்து 1.31 கோடி மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.5,000 வரவு வைத்தோம்.

கலைஞர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்ப்புதல்வன், கலைஞர் கனவு இல்லம் என ஒவ்வொரு துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றி உள்ளோம். ஒவ்வொரு தனி மனிதரும் பயனடையும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
1.15 லட்சம் மாணவர்கள் பயன்படும் வகையில் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம். 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1200லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகும் உயர்த்தப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்ப்செட்டுகள் வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்ப்செட்டுகள் வழங்கப்படும்.
தொழிற்சாலையில் அதிகம் உள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை பொருட்டு குழந்தைகள் காப்பகம் ஆயிரம் உருவாக்கப்படும். மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி சமூக பாதுகாப்பு வாழ்வாதாரமும் திறன் மேம்பாடு வங்கி கடன் கிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
பல்நோக்கு வசதி கொண்ட உள்ள விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும். 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நெல்கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications