''மம்தா மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்''... பொங்கி எழுந்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரசாரத்தின்போது சிலர் தன்னை தாக்கியதாகவும், தனக்கு காலில் அடிபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி சரமாரியாக குற்றம்சாட்டினார்.
மம்தா பானர்ஜி மீதான தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இனைந்தார். மம்தா தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடட்டும் என்று அவர் சவால் விடுத்தார்.

தீவிர பிரசாரத்தில் மம்தா
இந்த சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் களம் இறங்குவதாக அறிவித்தார். சுவேந்து அதிகாரியும்-மம்தாவும் நந்திகிராமில் நேரடியாக மோதுகின்றனர். இதனால் அங்கு பாஜக சார்பிலும், திரிணாமுல் சார்பிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, அங்கு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

மம்தா மீது தாக்குதல்
பின்னர் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.நான்கைந்து நபர்கள் தன்னை தள்ளிவிட்டதால் காலில் அடிபட்டு வீங்கியிருப்பதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், '' மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மீது உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications