செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்.. மாஜி தலைவர் கேஎஸ் அழகிரிக்கும் பாராட்டு!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக ராஜேஷ்குமார் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தார் கே.எஸ்.அழகிரி. கேஎஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) February 17, 2024
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்…
இந்நிலையில், அவரை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராகவும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகியுள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ள கு. செல்வபெருந்தகை, “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக செயல்படுவேன். இந்தியாவில் சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட இயக்கமாக காங்கிரஸ் செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
தொட்டதெல்லாம் வெற்றி.. கேஎஸ் அழகிரி தலைமையில் சரவெடி கொளுத்திய தமிழக காங்கிரஸ்.. ரெக்கார்டை பாருங்க!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம். இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு, தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராகவும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் முக்கியமான பொறுப்புகளை 2021ல் அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications