நீங்க எப்படி சாதாரண ஆளுன்னு சொல்லலாம்? வேட்பாளர் லிஸ்ட் பற்றி ஒரே கேள்வி.. சீறிய ஸ்டாலின்.. பரபரப்பு
சென்னை: இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்.. செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு கடுமையாக கோபம் அடைந்தார்.
Recommended Video
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திமுகவின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 173 தொகுதிக்கான பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.
திமுகவின் முக்கிய உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள் எல்லோரும் இந்த தேர்தலில் களமிறங்குகிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அதிமுகவின் அமைச்சர்களை எதிர்த்து திமுக சார்பாக முக்கிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள்
அதிமுக சார்பாக போடிநாயக்கநல்லூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதேபோல் தொண்டாமுத்தூரில் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து திமுக சார்பாக சிவசேனாதிபதி களமிறங்குகிறார். கருரில் எம்.ஆர் விஜய் பாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி களமிறங்குகிறார்.

சிறப்பு
இந்த நிலையில் அதிமுக சார்பாக முதல்வர் பழனிசாமி மீண்டும் எடப்பாடியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பாக சம்பத் போட்டியிடுகிறார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை களமிறங்கியது ஏன்? இதற்கு காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கோபம்
இதை கேட்டதும் கோபமா அடைந்த ஸ்டாலின்.. நீங்க எப்படி சம்பத்தை சாதராண நபர் என்று சொல்கிறீர்கள்? உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்? அவர் நல்ல வேட்பாளர்தான்.. அவரை சாதாரண வேட்பாளர் என்று சொல்வதை விட வெற்றி வேட்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

வெற்றி வாய்ப்பு
அவருக்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் எடப்பாடியில் அவரை களமிறக்கி இருக்கிறோம், என்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் கோபமாக குறிப்பிட்டார். அதோடு திமுக உறுப்பினர்கள் யாரும் சாதாரண வேட்பாளர்கள் இல்லை. இவர்கள் எல்லோரும் வெற்றி வேட்பாளர்கள்,எல்லோரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது, என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications