பொறுத்தது போதும்.. பொங்கி எழுவோம்.. மேடையிலேயே சபதம் எடுத்த ஸ்டாலின்.. டக்கென திரும்பிய தலைகள்!
சென்னை : "தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்" என முதலமைச்சர் ஸ்டாலின் கொந்தளித்துப் பேசியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இன்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களின் முன்னிலையில் பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் அது. 5 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக சடங்கு அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையையும், இந்தியாவின் கூட்டாட்சியையும் காப்பாற்றுவதற்கான தேர்தல்.
இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை, மாறுபாடுகளை மறந்து இந்தியாவை காக்க ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
அறிவாலயத்தில் இருந்து இந்த பொதுக்கூட்டத்துக்கு நான் காரில் வந்துகொண்டிருந்தபோது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போனில் தொடர்பு கொண்டார். வரும் 23ஆம் தேதி பீகார் பாட்னாவிற்கு வர வேண்டும். அகில இந்திய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் எப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தோமோ, அதேபோல, நாடு தழுவிய அளவில் மதவாத, பாசிச, யதேச்சதிகார பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும்.
சாதியால், மதத்தால், பிரிவினையை விதைத்து வெல்லும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஜெயிக்கப் பார்க்கும். அதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது.
எத்தகைய பொய்களைச் சொல்வதற்கும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள். அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும், பாஜகவிடம் ஏவலுக்கு கீழ்படியும் சிந்தனையற்ற பொறுப்புணர்ச்சியால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியோடு இன்று கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், கவலை இல்லை. மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஒற்றுமை, சகோதரத்துவம், உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
நம் உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். கருணாநிதி அடிக்கடி சொல்வார், நீ நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயக திருவிழாவையும் நாம் கொண்டாடக்கூடிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல, நாட்டிற்காக. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறக் கூடிய தேர்தல் என்பதை மனதில் வைத்து இந்த விழாவில் உறுதி எடுப்போம், சபதம் ஏற்போம். அதுதான் நம் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்" எனப் பேசினார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications