சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த கேள்வியை கேட்க ஸ்டாலினுக்கு உரிமையே கிடையாது.. தகிக்கும் தமிழிசை

Google Oneindia Tamil News

சென்னை: எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் திமுகவிற்கு அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு தார்மீக உரிமை கிடையாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கணினிகளை கண்காணிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நகலை ட்விட்டரில் ஷேர் செய்து இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த உத்தரவு என்பது அடிப்படை உரிமைகளை எதிரான செயல். அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் நமக்குத் தரப்பட்டுள்ள உரிமை. அதற்கு எதிராக உள்ளது இந்த உத்தரவு. இதை திரும்பப் பெற வேண்டும். இது கண்காணிக்கப்படும் நாடு கிடையாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.

MK Stalin has no moral rights to question about surveillance order: Tamilisai

ஸ்டாலினின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன். அதில், தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவசர நிலையைப் பிரகடனம் செய்து அடிப்படை உரிமைகளை நசுக்கிய காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளீர்கள். அதேநேரம் அவசர காலத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு உள்ளானதாகவும் நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி எழுப்புவதற்கு தார்மீக உரிமையை கிடையாது. இப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu unit BJP Chief Tamilisai Soundararajan said DMK president MK Stalin has no moral rights to question about surveillance order issued by the union government. "You are supporting Congress which has imposed emergency against Fundamental Rights in the past while climbing to have been suffered of emergency atrocities" Tamilisai added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X