நாவலூர் ஏரி மொத்தமா மாறிடுச்சு.. சிப்காட் ஐடி பார்க் வளாகத்தில் அழகாக உருவான சுற்றுச்சூழல் பூங்கா!
சென்னை: சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரி 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நாவலூர் ஏரி மீட்டெடுக்கப்பட்டு, புனரமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "மீட்டெடுத்தபின் அழகுறக் காட்சியளிக்கும் நாவலூர் ஏரி! நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தூய்மையாகவும் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பளவில் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் 14,000 கோடி ரூபாய் முதலீட்டையும் ஈர்த்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நாவலூர் ஏரி வறண்டு போகும் நிலையில் இருந்தபோது, சிப்காட் முழு அளவிலான மாற்றத்தை உருவாக்கிட முன் நின்றது. தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள், புல்வெளிகளுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்தும், 30 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவானது சுற்றுச்சூழல் அறிவு மையம், சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சிக் மேற்கொள்வதற்கான வசதிகள், பறவைகள் பார்வை மையம், திறந்தவெளி அரங்கம், நிர்வாக அலுவலகம், உணவகம், குடில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாதுகாப்பு மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டத்தை மேம்படுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிபடுத்தியும், தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதனை சார்ந்த பகுதியின் சுற்றுப்புற தோற்றத்தினை செழுமைபடுத்துகிறது. இந்தச் சுற்றுச்சூழல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமையப்பெற்றுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications