'சக்தி வாய்ந்த முதல்வர் ஸ்டாலின்'..தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்.. கைத்தட்டலால் அதிர்ந்த அரங்கம்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி படிப்பில், பல துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார். மேலும், இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்
விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- இதுவரை வீட்டுக்கு பிள்ளையாக இருந்த நீங்கள், தற்போது மருத்துவ துறைக்கு வந்து விட்டதன் மூலம் நாட்டு மக்களுக்கு பிள்ளையாகி இருக்கிறீர்கள். உங்களிடத்தில் நான் ஒரு கோரிக்கை வைக்க போகிறேன். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மருத்துவ சேவை என்பது மிகவும் சவாலாக உள்ளது.

கிராமப்புறங்களில் சேவை
மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு நீங்கள் மருத்துவராக பணியாற்றும்போது நீங்கள் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; அங்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடமையை நீங்கள் செய்ய வேண்டும். மக்கள் மருத்துவர்கள் என்னும் பெயரை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது மருத்துவ துறைக்கு திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சக்தி வாய்ந்த முதல்வர் ஸ்டாலின்
இதனை தொடர்ந்து பேசத் தொடங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, '' சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே'' என்று தொடக்கத்தில் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஆர்.என்.ரவி, '' மருத்துவ மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்த பட்டம் சாத்தியமாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது.

திருக்குறள் படியுங்கள்
ஏழைகளுக்கு மருத்துவம் எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்குவதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னிலையில் சென்று வருகிறது. நமது சங்க இலக்கியங்களில் ஏராளமான அறிவு சார்ந்த விஷயங்கள் உள்ளன. அதனை நாம் பார்க்க வேண்டும். 941 முதல் 950 வரையிலான 10 திருக்குறள்களை மாணவர்கள் படிக்க வேண்டும்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications