ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர்.. ஜெயக்குமார் புது குண்டு
சென்னை: அதிமுக ஆட்சிக்கு எதிராக டிடிவி தினகரனும், மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் என குற்றம்சாட்டினார்.
சென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆட்சியை கலைக்க வேண்டுமென்று, மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் பேசி வருகிறார்.
இந்த அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவற்றைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துவிட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
[மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது.. டிடிவி தினகரன் பேட்டி]

கிளி போல ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் இலவு காத்த கிளியாக கற்றுக்கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட்சியை கலைப்பதற்கு தினகரன் முயற்சி செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்கள் முயற்சி எல்லாம் பலிக்காது.

அதிமுக ஆட்சி மலரும்
2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் மீண்டும் மலரும். தினகரன் வாலறுந்த நரி போல ஆகியுள்ளார். அவராலும் ஆட்சிக்கு எதிராக, எதுவும் செய்ய முடியாது.

ரஜினிகாந்த் கட்சி
அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு, தனக்கு முதல்வர் பதவியும், தினகரனுக்கு துணை முதல்வர் பதவியும் அளிப்பது என்று பேசி வைத்துள்ளனர். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது.

திமுக பயம்
ரஜினிகாந்த்தை பார்த்து திமுகவுக்குத்தான் பயம். எனவேதான் முரசொலி நாளிதழில் அதுபோன்ற ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications