தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!
சென்னை: கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 60,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் அமைகிறது இந்த மினி டைடல் பூங்காக்கள்.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அதன்படி விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இவை மட்டுமின்றி நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டத்தில், 42 கோடி செலவில் 58,660 சதுர அடி பரப்பளவில் சுமார் 3 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. அதே போல் கரூர் மாவட்டத்தில் 37 கோடி ரூபாய் செலவில், 64,000 சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.மேலும் புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் பண்ணையில் சுமார் 37 கோடியில் 60,386 சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இவை ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்டு IT, ITeS, BPO's மற்றும் Start-ups போன்ற நிறுவனங்கள் இடம்பெறும் வகையில் கட்டப்படவுள்ளன. இந்தப் பூங்காக்கள், தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 1800 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அனைத்து அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்து வரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் அப்பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications