தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கும் பாதிப்புகள் தொடர்பாக திமுக எம்பிக்களுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விடுவோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
-
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications