சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள்
சென்னை: சென்னை - சென்ட்ரல் தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த பயணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பொதுமக்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பணி மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை - சென்ட்ரல் தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலையும் திமுக அரசே கொண்டு வந்துள்ளது. சென்னை மக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயிலை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரதான பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், அதை குறைக்கும் விதமாக மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது. பொதுமக்களோடு பொதுமக்களாக முதல்வர் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பயணிகள் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications