முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு வயது 92. வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக தயாளு அம்மாள் வெளியில் பெரிதாக வருவதில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் அன்று தாய் தயாளு அம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதியும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து தயாளு அம்மாள் வீட்டில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications