ஆடு பகை.. குட்டி உறவா.. அமைச்சர்களுக்கு எதிராக.. மாவட்டச் செயலாளர்களை கொம்பு சீவி விடும் ஸ்டாலின்!
சென்னை: ஆடு பகை குட்டி உறவு என்ற வகையில் திமுக தலைமை அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் மாவட்டச் செயலாளர்களோ அதிமுக அமைச்சர்களிடம் நட்பு பாராட்டி வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செம டென்ஷனை கொடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை திமுக, அதிமுக கட்சி தலைமை நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக பரஸ்பரம் வணக்கம் கூறி கொள்ளுதல், நலம் விசாரித்தல் இப்படித்தான் இருந்தனர். அது போல் தொண்டர்களும் பரஸ்பரம் எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டனர்.

டெண்டர்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் திமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்கள். இதன் மூலம் டெண்டர்கள், டாஸ்மாக் மதுபான பார் ஏலம், ஏரியில் மீன் குஞ்சு வளர்ப்பதற்கான டெண்டர் என பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

அண்ணா அறிவாலயம்
இந்த விவகாரங்கள் அண்ணா அறிவாலயத்தின் காதுகளை எட்டிய போதிலும் பணம் சம்பாதிக்கத்தானே, பிழைக்கட்டும் என தலைமை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டது. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள், முதல்வர் என திமுகவை யார் விமர்சித்தாலும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும், மூத்த நிர்வாகிகள் மட்டுமே பதில் அளித்து வருகிறார்கள்.

கோபம்
ஆனால் திமுக மாவட்டச் செயலாளர்கள் இது பற்றி கண்டுகொள்ளாதது ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் வேட்பாளர் தேர்வு செய்யும் உத்தேச லிஸ்டிலும் வெற்றி பெறாத செல்வாக்கு இல்லாத ஆட்களையே இந்த மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களாக பரிந்துரைத்ததால் ஸ்டாலினின் கோபம் அதிகமானது.

எம்எல்ஏக்கள்
இதற்கு ஒரே விஷயம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர்களை நிறுத்துவது என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சரை எதிர்த்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவால் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம் மா.செ.க்கள்!
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications