திமுக முப்பெரும் விழா.. சண்முகநாதன் இல்லையே.. குட்டி பிஏவை கலங்கியபடி ஸ்டாலின் நினைத்தது ஏன்?
சென்னை: உலகில் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒரே தலைவர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை ஆட்கொள்கிறது என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் திமுகவின் முப்பெரும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் "கலைஞர் கடிதங்கள்" தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.
கருணாநிதி 1968 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதியிருந்த 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

54 தொகுதிகள்
54 தொகுதிகளாக அவை வெளியாகியுள்ளன. இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதை தொடர்ந்து பேசிய அவர், உலகத்தில் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒரே தலைவர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை ஆட்கொள்கிறது என முதல்வர் ஸ்டாலின் கண் கலங்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விவரங்கள்
சண்முகநாதன் யார், அவர் குறித்து இந்த கவிதை நூல் தொகுப்பில் ஸ்டாலின் நினைவுக்கூர காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். சண்முகநாதன் காவல் துறையில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றி வந்தார். கருணாநிதி செல்லும் அத்தனை இடங்கள், பொதுக் கூட்டங்களுக்கு சென்று அவரது பேச்சுகளை அப்படியே குறிப்பெடுக்கும் ஆற்றல் கொண்டவர்.

நீள பேச்சு
எத்தனை நீள பேச்சாக இருந்தாலும் மிகவும் கச்சிதமாக குறிப்பெடுத்துவிடுவார். ஒரு பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதை அப்படியே குறிப்பெடுத்தார். அவர் பேசியது குறித்து இவருடைய குறிப்பின் அடிப்படையில் கருணாநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கருணாநிதி பேசியதை குறிப்பெடுத்த சண்முகநாதனின் குறிப்பின் பிரதியை கருணாநிதிக்கு அனுப்பியிருந்தனர்.

கருணாநிதிக்கே அதிர்ச்சி
இதை பார்த்து கருணாநிதி ஷாக்காகிவிட்டார். தான் பேசியதை அப்படியே எழுதியிருக்காரே என பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி, சண்முகநாதனை சட்டமேலவை சுருக்கெழுத்தாளர் பணிக்கு மாற்றினார். பின்னர் 1969-ல் கருணாநிதியின் நேர்முக உதவியாளரானார்.

ஒரு வார்த்தையை கூட மிஸ் செய்யாதவர்
அன்று முதல் கருணாநிதி பேசும் ஒரு வார்த்தையை கூட விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். 50 ஆண்டுகள் கருணாநிதியுடனேயே நிழலாக இருந்தவர். கருணாநிதிக்கு சண்முகநாதனுடன் 3 பிஏக்கள். அவர்களில் சண்முகநாதன் இளையவர் என்பதால் அவரை குட்டி பி.ஏ என்றுதான் அழைப்பார். எந்த கூட்டமாக இருந்தாலும் கைகளில் நிறைய கோப்புகளுடன் கருணாநிதியுடன் சண்முகநாதன் வருவார்.

புள்ளி விவரங்கள்
கருணாநிதிக்கு பின்பு உட்கார்ந்திருப்பார். கருணாநிதி என்ன பேசுவார் என்பதை அறிந்து ஒவ்வொரு புள்ளி விவரங்கள் கொண்ட ஒவ்வொரு பேப்பராக எடுத்துக் கொடுப்பார். கருணாநிதியின் கண் அசைவிற்கேற்ப புரிந்து கொண்டு நடப்பார். கோபாலபுரத்தில் சண்முகநாதனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு கருணாநிதி இறந்த பிறகும் தினமும் செல்வார்.

கருணாநிதி எழுதிய கடிதங்கள்
அங்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை தேதிவாரியாக தொகுத்து கொடுத்தார். சண்முகநாதன் இல்லாவிட்டால் இந்த பணி அத்தனை எளிதில் முடிந்திருக்காது. அதனால்தான் முப்பெரும் விழாவில் சண்முகநாதனை ஸ்டாலின் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார். கருணாநிதி மறைவால் மிகவும் மனவேதனையில் இருந்த சண்முகநாதனும் கடந்த ஆண்டு மறைந்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications