Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலில் உயிர் இருக்கும் வரை கடமையை நிறைவேற்றுவேன்.. கொளத்தூரில் உருக்கமாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கிய அவர், மாணவ மாணவிகளை சந்தித்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன்.

MK Stalin dmk Kolathur

கொளத்தூர் சுற்றுப்பயணம்

என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னவோ தெரியவில்லை. கொளத்தூருக்கு வந்துவிட்டால் எனக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது. அதுவும் அனிதா அச்சீவர்ஸ் அகாடெமியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவியர்களையும், மாணவர்களையும் பார்க்கின்றபோது இதுபோல் எண்ணம் வருகிறது. இன்றைக்கு காலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள்.

மு.க.ஸ்டாலின் உரை

கண் கண்ணாடிகள் வழங்கி, அதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனையில், தொடர்ந்து வழங்கி, இன்றோடு சேர்த்து, 9 ஆயிரத்து 123 பேருக்குக் கண்ணாடி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த 126 மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப்பும்- 356 பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கியிருக்கிறோம். இங்கு அந்த மாணவ - மாணவிகள் எல்லாம் இருக்கிறீர்கள்... உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்கும் பயிற்சி, ஒரு சிறிய துவக்கம்தான். இந்தப் பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய கதவை திறந்து வைக்கும் அவ்வளவுதான்.

கல்வி முக்கியம்

ஆனால், அந்தப் பாதையில் நீங்கள் வெற்றிகரமாக நடைபோட வேண்டும் என்றால், கற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடக் கூடாது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்துகொண்டு வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் Upgrade ஆகிக்கொண்டே வரவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து உங்கள் திறமையை மேலும், மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு லேப்டாப்

நிறைய Online Course இருக்கிறது. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதைத் தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. படித்துவிட்டோம் - வேலை கிடைத்துவிட்டது என்று இருந்துவிடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை Continue செய்யுங்கள். படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த - கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் வாக்குறுதி

எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். அதிலும் குறிப்பாக உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால்தான், நாம் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நம்முடைய ஒற்றுமையைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+