"ஸ்டாலின் ஐயா.. ரொம்ப நன்றி".. நெகிழ்ந்த டெல்டா.. நாகை, திருவாரூரில் முதல்வர் இன்றும் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், 2வது நாளான இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி பருவம் துவங்கி உள்ளது. இதற்காக, கடந்த 24-ம்தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது..
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்... இதில், கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன..

தூர் வாரும் பணி
இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது... மேலும், 900 கி.மீ.,க்கு மேல் தூர்வார வேண்டி உள்ளது... அதனால், குறித்த காலத்திற்குள் தண்ணீர் சென்று சேர வேண்டி உள்ளது.. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தற்போது நிறைவுடையும் நிலையிலும் உள்ளன. இப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை, முதல்வர் நேற்றும் இன்றும் ஆய்வு செய்ய முடிவு செய்து, அதன்படி நேற்றைய தினம் தஞ்சை வந்திருந்தார்..

நேரில் ஆய்வு
பீமனோடை வடிகால் வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்... பாபநாசம் தாலுகா, வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் 4.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் இருந்தனர்.

கண்காட்சி
பிறகு, தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர், அப்பகுதி மக்களை சந்தித்து முதல்வர் பேசினார். அப்போது மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெற்று உள்ளதா? விவசாயிகளுக்கு திருப்தியாக இருக்கிறதா? எனவும் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டறிந்தார். அதற்கு விவசாயிகளும் நீர் திறந்துவிட்டது குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

வேளாங்கண்ணி
முதல்வரை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலையோரத்தில் திரண்டு நின்றனர்... இவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் நிற்கும் இடத்திற்கே ஸ்டாலின் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். பிறகு, முதல்வர், ஸ்டாலின் கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டல் ஒன்றிலும் இரவு தங்கினார்.
Recommended Video

கருணாநிதி அருங்காட்சியம்
அதேபோல, இன்றைய தினம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு வேளாங்கண்ணி அருகே உள்ள கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பிறகு, அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்த கொத்தங்குடியில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

திருவாரூர்
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த முதல்வர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அங்கிருந்து மறுபடியும் திருவாரூர் வரும் முதல்வர், சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடுகிறார்... மாலை 4 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications