"பலே கில்லாடி".. இப்பதான் டிவியில பார்த்தேன்.. "அவர்" என்னமா டான்ஸ் ஆடறாரு.. தெறித்து சிரித்த மக்கள்
அமைச்சர் ஜெயக்குமார் மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
சென்னை: இப்படி எல்லாம் பேசுறது ஸ்டாலினா என்று பொதுமக்கள் வியந்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. காரணம், ஸ்டாலினின் இயல்பான மற்றும் கேஷூவல் பேச்சுக்கள் துற்போது அப்படி அமைந்து வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை, பல விமர்சனங்களை தாங்கி வருபவர்.. என்ன காரணத்தினாலோ, கலைஞர் மகன் என்ற ஒரே காரணத்துக்காக, ஸ்டாலினின் பேச்சு, கலைஞருடனேயே ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது.
அதனால், இயல்பாய் எழக்கூடிய தவறுகளும் சோஷியல் மீடியாவில் பெரிதுப்படுத்தப்பட்டு வருகின்றன.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கம், சுபாவம் என்பதையும் மீறி, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றாலும், நேற்று ஸ்டாலின் பேசிய பேச்சு, மக்களை வெகுவாக ரசிக்க செய்துள்ளது.

ராயபுரம்
வழக்கம்போல நேற்றும் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.. ராயபுரம் தொகுதிக்கு திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு சென்றார்.. அங்கு அவர் பேசிய இதுதான்: "நான் ஏன் இங்கே வந்தேன் தெரியுமா? என்ன தெரியுமா ஸ்பெஷல்? இந்த தொகுதியில் நிக்கிற அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டணும்.. தோல்வி அடைய வைக்கணும்.. தோல்வின்னா உங்க வீட்டு தோல்வி, எங்க வீட்டு தோல்வி இல்லை.. படுதோல்வி அடையணும்.. டெபாசிட் காலி ஆகணும்.. அவர் சாதாரண ஆளுன்னு நினைச்சிடாதீங்க.. கில்லாடி இல்லை.. பலே கில்லாடி.. ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர்.

ஜெயக்குமார்
2011-ல் ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை தந்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கில் அவங்க ஜெயிலுக்கு போனதை நினைச்சு, நான்தான் அடுத்த முதல்வர்ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டினவர்தான் இந்த ஜெயக்குமார். இந்த செய்தி போயஸ் கார்டனுக்கு போய், இவர் பதவியை பறிச்ச கதையும் உங்களுக்கு தெரியும்.. அப்படிப்பட்ட முந்திரிக்கொட்டைதான் இவர்..

முதல்வர்
அன்னைக்கு வருங்கால முதல்வர்ன்னு பேர் போட்டுக்கிட்ட ஜெயக்குமார், இன்னைக்கு எடப்பாடி பழனிசாமிக்கிட்ட பிஆர்ஓ வேலை பார்த்துக்கிட்டு இருக்கார்.. மைக் பார்த்தால் பேசுவார்.. மக்களை பார்த்தால் பேச மாட்டார்.. ஒருமுறை இல்லை 5 முறை இந்த ராயபுரத்துக்கு எம்எல்ஏவா இருந்தும் ஒன்னுமே செய்ய முடியாத ஒரு எம்எல்ஏ-ன்னா அது ஜெயக்குமார்தான்..

டான்ஸ்
இப்போ டான்ஸ் எல்லாம் ஆடறார் போல... பாட்டு எல்லாம் பாடறார்.. டிவியில கூட பார்த்தேன்.. மோளம் எல்லாம் அடிச்சு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஆதரவா இருக்கிற மாதிரி காட்டிட்டு நாடகம் ஏதோ நடத்திட்டு இருக்கார்.. நான் கேட்கிறேன், இப்போ மோளம் அடிச்சி டான்ஸ் ஆடறேங்களே, அன்னைக்கு வண்ணாரப்பேட்டைக்கு ஏன் போல? அந்த மக்களை போய் பார்த்தீங்களா?

போராட்டம்
கொரோனா வந்துடுச்சு, போராட்டத்தை நிறுத்துங்கன்னு அவங்க கிட்ட போய் சொன்னீங்களா?தேர்தல் பிரச்சாரம் செய்யறதுக்கு யோக்கியதை இல்லை.. தைரியம் இல்லை, அருகதை இல்லை.. துப்பு இல்லை, துரும்பு இல்லை.. நான் கேட்கிறேன், மீன்வளத்துறையை பலப்படுத்தறதுக்காக என்ன செஞ்சி கிழிச்சாரு இந்த ஜெயக்குமாரு? உங்க மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே நடக்காது.

தொகுதி
அதனால இந்த தொகுதியில் நிற்க கூடிய திமுக வேட்பாளர்களை நீங்க வெற்றி பெற வைக்கணும்.. அவங்க மட்டுமல்ல, நானும் தான் இங்கே நிக்கிறேன்.. முதலமைச்சர் வேட்பாளரா நிக்கிறேன். இவங்களை எல்லாம் வெற்றி பெற வைத்தால்தான் நான் முதலமைச்சராக முடியும்.. அதனால் உங்களின் வாக்குகளை கேட்கிறேன் என்றார். ஸ்டாலினின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications