காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு!
விருதுநகர்: மறைந்த காமராஜரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சங்கி கூட்டங்களை போல வாட்ஸ் ஆப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அடுத்தடுத்த பொய்கள கூட்டமே இல்லாமல் பேசி வருகிறார். மறைந்த காமராஜருக்கு , கருணாநிதி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்கிறார். காமராஜர் உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்ததே கருணாநிதிதான்.
காமராஜரின் உடலை முப்படைகளிடம் இருந்து பெற்று பீரங்கி வண்டி மீது கருணாநிதி ஏற்றினார். காமராஜருக்கு மகனை போல் இறுதிச் சடங்குகளை செய்தார் கருணாநிதி செய்தார்.
டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தது சங்கிக் கூட்டம். தேர்தல் என வந்துவிட்டால் தமிழக தலைவர்கள் மீது சங்கிகளுக்கு பாசம் வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் தமிழர், தமிழ்நாடு, தமிழகம் என்றாலே சங்கிகளுக்கு வெறுப்புதான்.
ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் கருணாநிதி போல் விருதுநகர் என்றாலே காமராஜர்தான். காமராஜர் மண் இது. அரசியல் கடந்து தனிப்பட்ட முறையிலும் எனக்கு காமராஜர் மீது மிகுந்த மரியாதை உண்டு.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டத்தை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் சோகமாக உள்ளார்.
பணத்திற்கு பதிலாக கூப்பன் தருவதால் மக்கள் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் திமுக கமிஷன் அடிக்கும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கூப்பனாக கொடுக்கிறோம், அதை வைத்து உங்களுக்கு வேண்டிய பொருளை, தெரிந்த கடையில் வாங்க போகிறீர்கள். இதில் திமுக எப்படி கமிஷன் அடிக்கும்? பொய்யாக சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அரசு ஊழியர்களின் வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்காது. காமராஜர், ஜானகி ஆகியோரின் உடல்களை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர திமுக மறுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். சட்டசபையில் ஜானகியின் படத்தை வைத்தவர் கருணாநிதி. அதிமுகவே மறந்த ஜானகி அம்மையாருக்கு கருணாநிதி மரியாதை செலுத்தினார் என ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை தனது ஆருயிர் தம்பி என்று முதலமைச்சர் அழைத்தார். விஜயகாந்த் குறித்த நினைவலைகளையும் பகிர்ந்த ஸ்டாலின் "சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா" என்ற பாடலை பாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications