மோடியும் CMஆ இருந்தவர்.. பிரதமர் முன்பே கருணாநிதி சொன்ன மாநில சுயாட்சி பாடமெடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின் கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி மாநில சுயாட்சி குறித்த ஆழமான கருத்தை பதிவு செய்து உள்ளார். பிரதமர் மோடியும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று காலை தெலுங்கானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பின் சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு: சென்னை பல்லாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நெஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, அமைச்சர் தாமொ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு முதலில் நன்றி சொல்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்து உள்ளார் பிரதமர் மோடி. பல்வேறு இனங்களை சார்ந்த பல மொழிகளை பேசு மக்கள் பரந்து வாழும் பன்முகத்தன்மை கொண்டு வாழும் மாநிலங்களை கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் ஒன்றிய அரசானது மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து தொய்வின்றி நிறைவேற்றித் தரும்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும்.

கூட்டாட்சி தத்துவம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட கூட்டாட்சி கருத்தியலும் செழிக்கும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது. நெருக்கடியான நிதிநிலை கூழல் இருக்கும்போதிலும் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோதிலும் சாலைகள் மற்றும் பாலங்களுக்கான மூலதன செலவாக இருந்த ரூ.33,068 கோடியை இந்த ஆண்டு ரூ.44,365 கோடியாக உயர்த்தி உள்ளோம். சென்னை 2 வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்க்ளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
கருணாநிதி சொன்னது: ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் அனைத்து வலுவையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக வைப்பது கேலிக்கு உரியது அல்லவா? என்று கருணாநிதி கேட்டார்.
மக்களுக்கு நெருக்கமானது மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே மாநிலங்களுக்கு நிதி தேவையும், மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு மிக மிக தேவை. இந்திய பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவர் உணர்வார் என்று நம்புகிறேன்." என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications