அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் தஞ்சாவூரில் இன்று (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது நான்காம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமையான இன்று (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது.

இதில், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்ரல் 11) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதி வேட்பாளர்களையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications