Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 காசும் பரிசும்.. இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடும் மக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் சமைக்க தேவையான மளிகை பொருட்கள், கரும்புடன் ரூ.1000 தொகை வழங்கப்படுவது வழக்கம். ரூ.1000 தொகை கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

MK Stalin to launch the Pongal gift and Rs.1000 distribution program today

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும் என்றும், சர்க்கரை ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்றும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக வழங்குவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 பெறுவதற்கு கடந்த ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீடு தேடி டோக்கன் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த டோக்கனில் ரூ.1000 தொகை பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்டு உள்ளன. நேற்றுடன் டோக்கன் பெறும் தேதி முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளன. டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 தொகையும் வழங்கப்பட இருக்கிறது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்டவை இந்த தொகுப்பில் இடம்பெற்று இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் இதனை தொடங்கி வைக்கிறார். மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் இதை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 தொகையும் வழங்கப்படுகிறது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்டவை இந்த தொகுப்பில் இடம்பெற்று இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் இதனை தொடங்கி வைத்து உள்ளார். மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் இதை தொடங்கி வைத்து உள்ளார்கள்.

இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை ரூ.1000 தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்கள் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+