கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. 5 லட்சம் டெபாசிட்.. திட்டத்தை துவங்கி வைத்தார் ஸ்டாலின்
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும், கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததால், பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கின்றனர்.

தலா 5 லட்சம்
ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிதியுதவி திட்டம்
பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்படும். அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.

10 குழந்தைகள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். பெற்றோரை இழந்த 10 குழந்தைகளுக்கு முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வைத்தார் மு.க.ஸ்டாலின்.

அறிவிப்பு மட்டுமே
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தலா ரூ.10 லட்சம், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். தமிழக முதல்வர் அறிவித்த அதே நாளில்தான் சில மணி நேரம் கழித்து பிரதமரும் அறிவித்தார். இருப்பினும் இந்த திட்டம் இன்னும் துவக்கி வைக்கப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications