உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்
சென்னை: உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை என தந்தையர் தினத்தில் கருணாநிதியை நினைத்து ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் நினைவலைகளை அசைப்போட்டு ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.

உருக்கம்
உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! #HappyFathersDay #MissUappa என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

கற்றுக் கொடுக்க
கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நல பாதிப்புகளால் மரணமடைந்தார். ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தவர் கருணாநிதி. இவர் அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றே அவசியம் இல்லை.

அரசியல் கற்றுக் கொண்ட ஸ்டாலின்
இவருடன் இருந்தாலே போதும் அரசியல் நுணுக்கங்களையும் சாணக்கியத்தனத்தையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். அப்படி உடனிருந்தே அரசியல் கற்றுக் கொண்டவர் ஸ்டாலின்.

கண்கலங்கிய ஸ்டாலின்
அப்படி தந்தையாக, குருவாக, ஆசானாக, தலைவராக இருந்த கருணாநிதி மறைவை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்ட போது கருணாநிதியை நினைத்து கண்கலங்கினார் ஸ்டாலின்.
|
ட்விட்டரில் உருக்கம்
அது போல் எண்ணற்ற தருணங்களில் கருணாநிதியை நினைத்து கண் கலங்கிய ஸ்டாலின், கடைசியாக மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களில் பெற்ற வெற்றியை காண கருணாநிதி இல்லை என்று கூறி கண் கலங்கினார். அதோடு தற்போது தந்தையர் தினத்தில் அவரை நினைத்து ஸ்டாலின் ட்விட்டரில் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications