இன்று விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2... விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: சந்திராயன் -2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை ஏவப்படும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம், நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-2 செலுத்தப்படும். பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும்.
இந்நிலையில், சந்திராயன் - 2 வுக்காக பணியாற்றிய அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோ மற்றும் சந்திராயன் 2 உடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.I extend my heartfelt congratulations to #ISRO and all those who are associated with #Chandrayaan2
— M.K.Stalin (@mkstalin) July 14, 2019
Our nation's future is closely linked to our scientific advances.
On behalf of the DMK, I wish them a successful Moon Mission and many more such endeavours.
மேலும், நமது நாட்டின் எதிர்காலம், அறிவியல் முன்னேற்றங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளது என்றும், மூன் மிஷன் மற்றும் இன்னும் பல முயற்சிகள் வெற்றியடைய திமுக சார்பில் வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications