சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சி.ஏ.ஏ..வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் உட்பட அனைத்து மாநில சட்டசபைகளிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

MK Stalin urges All states to pass resolution against CAA

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.

MK Stalin urges All states to pass resolution against CAA

ஆகவே வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பினராயி விஜயன் அதிரடி.. குடியுரிமை சட்ட திருத்தம்.. திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபை தீர்மானம்!பினராயி விஜயன் அதிரடி.. குடியுரிமை சட்ட திருத்தம்.. திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபை தீர்மானம்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin has urged that All the states to pass the resoulition on Centre Should with draw the CAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X