“பீகார் நிலைமை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது”.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: பீகார் போன்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது. பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகள் திருமண விழாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் "பீகாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சகோதரர் ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டிருக்கிறார்.
பீகாரில் நடந்ததை தமிழ்நாட்டில் நடக்க விடாமல் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவர்தான் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ" என திமுக ராஜ்யசபா எம்.பி என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications