எடப்பாடி பதவி விலகாவிட்டால் டிஸ்மிஸ் செய்யுங்கள்.. எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி
Recommended Video

சென்னை: நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு, உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
இந்த நிலையில், முதல்வர் பதவி விலக பல கட்சி தலைவர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கடந்த ஜூன் 13ம் தேதியே நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார் அளித்தது.

சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஆளுநர், அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ரூ.3120 கோடி நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை தனது சம்மந்திக்கு ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், டெண்டர் விட்டதில் ஊழல் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையை அறிக்கைதர வைத்தார். தனக்குத்தானே நீதிபதியாகிக்கொண்ட முதல்வரை பார்த்து நாடே வெட்கப்படுகிறது. இந்திய முதல்வர்களிலேயே தம் சம்மந்திக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது எடப்பாடி மட்டுமே.
திட்டத்திற்கு நிதி உதவி அளித்த உலக வங்கி விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளார் எடப்பாடி. சிபிஐ சுதந்திரமாக விசாரணை நடத்த வழிவிட்டு பதவியில் இருந்து முதல்வர் விலக வேண்டும். டெண்டர் ஊழல் வழக்கு ஆதாரங்களை பெற்று சிபிஐ விசாரணையை உடனே துவங்க வேண்டும்.
உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறி சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், எடப்பாடி மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. ஆளுநர்களின் உதவியால் தப்பி வந்த எடப்பாடி இப்போது சிபிஐயில் சிக்கியுள்ளார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், எடப்பாடி மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே












Click it and Unblock the Notifications