"அச்சாரம்" போட்ட ஸ்டாலின்.. ஆஹான்னு பாராட்டிய ராமதாஸ்.. ஓஹோ.. இப்படி போகுதா மேட்டர்..!

திமுக அறிவிப்பை வரவேற்று ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியாரின் பிறந்த நாள் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.... இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்... இது தற்போது விவாதமாக கிளம்பி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது... இன்றைய தினம் பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்திலுள்ள தலைமை செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

 சமூக நீதி

சமூக நீதி

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தன்னடைய ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

 மறியல் போராட்டம்

மறியல் போராட்டம்

1987-ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காகப் போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்... பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பாமக சமூக நீதி நாள் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!" என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல்

தேர்தல்

இதுதான் தற்போது விவாதமாக உருவெடுத்துள்ளது.. இந்த முறை தேர்தல் முடிந்ததில் இருந்து, திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து அதிமுக - பாமக கூட்டணி அமைத்திருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு இந்த கட்சிகளும் சட்டப்பேரவையில் இணைந்து இயங்கவில்லையோ? என்ற சந்தேகம் எழுகிறது.. காரணம், இதுவரை சட்டமன்ற கூட்டத்தை அதிமுக மட்டுமே புறக்கணித்ததே தவிர பாமக புறக்கணிக்கவில்லை.. அதிமுகவும், பாஜகவும் மட்டுமே விமர்சித்து வருகிறதே தவிர, திமுக அரசை பாமக விமர்சிக்கவில்லை.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

ஒருவேளை 10.5 இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது, இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக மணிமண்டபம் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் பாமகவினரிடம் பெரும் வரவேற்பை பெற காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளுமே களப்பணியில் இறங்கி உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், பாமக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.. இதுவும் எதற்காகவென்று தெரியவில்லை.

உள்ளாட்சி

உள்ளாட்சி

நடக்க போகும் 9 மாவட்ட தேர்தல்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர்த்து மற்ற பெரும்பாலான 7 மாவட்டங்களும் வடமாவட்ட பெல்ட்டில்தான் வருகிறது.. வன்னியர் சமூக வாக்குகள் நிறைந்துள்ள மாவட்டங்களாகும்.. ஒருவேளை பாமகவுடன் திமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகமும் சில தினங்களாகவே எழுந்து வருகிறது..

அதிமுக

அதிமுக

ஏற்கனவே வடமாவட்ட புள்ளி சிவி சண்முகத்துக்கும், பாமகவுக்கும் லோக்கல் பஞ்சாயத்து பல காலமாகவே உள்ளது.. இப்படி திமுகவை வரவேற்று தீர்மானமே போட்டுள்ளது சிவி சண்முகம் தரப்புக்கு கடுப்பை உண்டு பண்ணி வருகிறது.

வடமாவட்டம்

வடமாவட்டம்

இந்த சூழலில்தான், இன்னொரு ட்வீட் போட்டு, மேலும் வடமாவட்டஅதிமுகவை கொந்தளிக்க வைத்துள்ளார் ராமதாஸ்.. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளதை பாராட்டியும், சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்றும் உள்ளது, கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுவிட துவங்கி விட்டதோ என்ற சந்தேகத்தையும் கூட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+