ஓஹோ, இப்டியெல்லாம் நடக்குதா.. நீங்க வாங்க முதல்ல.. "விசுவாசி"க்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்
அன்பகம் கலைக்கு புதிய பொறுப்பை தந்து அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின்
சென்னை: "சூப்பர்.. முதல்வர் ஸ்டாலின் இப்படியெல்லாம் கூட சர்ப்ரைஸ் தருவாரா" என்று திமுக கூடாரமே ஆச்சரியத்தில் திளைத்து கிடக்கிறது.. காரணம், யாருமே எதிர்பாராத ஒருவரை, மிகப்பெரிய பொறுப்பில் உட்கார வைத்து திக்குமுக்காட வைத்துள்ளார் கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின்.
திமுகவில் அமைப்பு செயலாளர் பதவி என்பது வலிமையானது.. அதிகாரம் மிக்க பதவி.. இப்போதைக்கு இந்த அமைப்புச் செயலாளராக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி இருக்கிறார்.
அவரது பணி சுமையை குறைப்பதற்காக அமைப்புச் செயலாளர் பதவியை 2ஆக மாற்ற தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக அதில் மாற்றம் நிகழவில்லை.

நியமனம்
இந்த நிலையில், துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம்தான் கட்சியின் பல தரப்பிலும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்திருக்கிறது... இவரா? எப்படி? எப்போது? என்ற வியப்பு கேள்விகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன... காரணம், இப்படி ஒரு நியமன அறிவிப்பு வரப்போகிறதென்று அறிவாலய மேலிட பொறுப்பாளர்களுக்கே தெரியவில்லை. துரைமுருகனுக்கு மட்டுமே தெரியும். அறிவிப்பை டைப் பண்ணப்பிறகுதான் அறிவாலய முக்கியஸ்தர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

அறிவாலயம்
கலை, கடந்த பல மாதங்களாக அதிருப்தியில் இருந்தார். அறிவாலயத்துக்கும் அன்பகத்துக்கும் கூட எப்போதுதான் போவார். முந்தைய காலங்களை போல, தினமும் செல்வதை ரொம்பவுமே குறைத்துக் கொண்டார். சமீபத்தில் பழைய சம்பவம் ஒன்றை கேட்பதற்காக கலைக்கு ஸ்டாலின் போன் போட்டுள்ளார்.. அப்போதுதான் கலையின் கவலையும் அதிருப்தியும் உணர்ந்துள்ளார் ஸ்டாலின்.

யோசனை
இதற்கிடையே அறிவாலயத்தில் நடக்கும் பல தவறுகள், ஸ்டாலினின் கவனத்துக்கு போவதில்லை. பத்திரிகைகளில் செய்தி வரும் போதுதான் இப்படியும் நடக்கிறதா என்று பல முறை யோசித்துள்ளார் ஸ்டாலின். இந்த நிலையில்தான், தற்போது முதலமைச்சராக இருப்பதால் அதனுடைய பணிகளை கவனிப்பதற்கே நேரம் போதாததால், கட்சி தலைமையில் நடக்கும் தவறுகளையும், நடப்பவைகளையும் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே தனது விசுவாசியான ஒருவரை நியமிக்க முடிவு செய்தே கலையை கொண்டு வந்துள்ளார்.

அமைப்பு செயலாளர்
கலையின் அதிருப்தியை போக்கியதும் போலவும் இருக்கும், அறிவாலயத்தில் நடப்பது நமக்கு தெரிந்தது போலவும் இருக்கும் என்றே கலையை உள்ளே கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள் அறிவாலயத்தரப்பினர். திமுகவில் அமைப்புச் செயலாளராக கல்யாண சுந்தரம் இருந்தார். அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டபிறகு ஆர்.எஸ். பாரதி நியமிக்கப்பட்டார். பாரதிக்கு உதவியாக இருக்கட்டும் என டிகேஎஸ் இளங்கோவனை, துணை அமைப்புச் செயலாளராக கொண்டு வந்தார் ஸ்டாலின்... டிகேஎஸ் ராஜ்யசபா எம்பியானதற்கு பிறகு துணை அமைப்பு செயலாளராக யாரையும் நியமிக்கவில்லை. இந்த நிலையில்தான், கலையின் நியமனம் நடந்துள்ளது..!
-
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications