சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்மாய்களை தூர்வாருவது குறித்து முதல்வரிடம் பேசினேன்.. கருணாஸ் எம்எல்ஏ அடடே விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வரை சந்தித்த கருணாஸ்! சபாநாயகர் மீதான நோட்டீஸ் வாபஸ்- வீடியோ

    சென்னை: தனிப்பட்ட காரணங்களுக்காக நான் முதல்வரை சந்திக்கவில்லை. எனது தொகுதிக்காக மட்டுமே சந்தித்து பேசினேன் என திருவாடாணை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா இருந்த போது கடந்த 2016-ஆம் ஆண்டு தோழமை கட்சியாக கருணாஸின் முக்குலத்தோர் புலிகள் படை போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த போது அவரை கருணாஸ் ஆதரித்தார்.

    அடித்து விடுவேன்

    அடித்து விடுவேன்

    இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி நகர் போலீஸ் உயரதிகாரி அரவிந்தனுக்கு மிரட்டல் விடுத்தார். அப்போது முதல்வரே நான் எங்கே அடித்து விடுவோனே என அச்சப்படுகிறார்.

    தீர்மானம்

    தீர்மானம்

    கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த ராஜாங்கத்தை பழனிச்சாமியால் அமைத்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதாகி ஜாமீனில் வெளியே வந்த கருணாஸ் , சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    அவசரம்

    அவசரம்

    அதில் சபாநாயகர் பாரபட்சத்துடன் செயல்படுகிறார். இதனால் பல எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என தாக்கல் செய்திருந்தார். மேலும் கூவத்தூரில் நடந்த கூத்துகளை உயர்நீதிமன்றம் கேட்டால் சொல்லத் தயார் என்று கூறி முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்த கருணாஸ், அந்த தீர்மானத்தை இன்று அவசர அவசரமாக வாபஸ் பெற்றார்.

    முதல்வரை சந்திக்கவில்லை

    முதல்வரை சந்திக்கவில்லை

    இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் முதல்வரை சந்திக்கவில்லை.

    வாபஸ்

    வாபஸ்

    திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாருவது குறித்து முதல்வரிடம் பேசினேன். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கும் என்பதால் வாபஸ் வாங்கினேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    MLA Karunas withdraws no confidence motion against Speaker Dhanapal and says that he meet CM Edappadi Palanisamy for constituency issues, not for personal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X