குன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு? அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ பங்கேற்கவில்லை
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களமே தகித்து காணப்படும் நிலையில், மிக முக்கியமான எம்எல்ஏவான குன்னம் ராமச்சந்திரன் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா சொன்னதுமே, அதற்கு உடனடியாக ஆதரவை தந்தது பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன்தான்.

இது சம்பந்தமாக ஒரு வீடியோகூட வெளியிட்டார். அதில், "ராஜன் செல்லப்பா சொன்னதுபோல ஒற்றைத்தலைமையும், வலிமையான தலைமையும், சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். கழகத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழவேண்டுமே தவிர, தன் குடும்பத்துக்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களைப்போன்ற தொண்டர்களுக்கு வேதனையாக உள்ளது" என்று பகிரங்கமாகவே சொல்லி இருந்தார்.
இப்படியெல்லாம் இவர்கள் பேசியதால்தான், இன்றைக்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதாகி உள்ளது. யார் அந்த ஒற்றை தலைமை என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவும் பேசிய குன்னம் ராமச்சந்திரன், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால், இதற்கு அதிர்ச்சிகரமான காரணமோ, பின்னணியோ எதுவுமே இல்லை. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். அதனால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்றைய கூட்டம் நடந்து முடியும் நிலையில், எப்படியும் ராமச்சந்திரன் தனது கருத்தை எடுத்துரைப்பார் என்று நம்பப்படுகிறது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications