பேண்ட் போட்டவன் விவசாயம் பண்ணக் கூடாதுனு யார் சொன்னது.. கழுத்தில் பச்சை துண்டுடன் டிஆர்பி ராஜா
சென்னை: பேண்ட் போட்டவன் விவசாயம் செய்யக் கூடாதுனு யார் சொன்னது என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா இன்று விவசாய பட்ஜெட்டை முன்னிட்டு பேண்ட் அணிந்து கொண்டு கழுத்தில் பச்சை நிற துண்டு அணிந்து கொண்டு சட்டசபைக்கு வந்திருந்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக இன்றைய தினம் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்த மூன்றாவது மாநிலம் தமிழகம் என்ற சாதனையை படைத்துள்ளது.
பேப்பர் பயன்பாட்டை குறைக்க இந்த 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டானது இ பட்ஜெட்டாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட்
இன்றைய தினம் தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டிற்காக சட்டசபைக்கு வந்த டிஆர்பி ராஜா கழுத்தில் பச்சை நிறத்தினாலான துண்டை அணிந்திருந்தார். இந்த பச்சை நிறத் துண்டு விவசாயத்தை குறிக்கும்.

நண்பர்கள் சகிதமாக வந்த ராஜா
தனது சக எம்எல்ஏக்களும் நண்பர்களுமான உதயநிதி, எழிலன் ஆகியோருடன் வந்திருந்தார் டிஆர்பி ராஜா. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பேண்ட் போட்டவன் #விவசாயம் பண்ண கூடாதுன்னு யார் சொன்னது ! படித்த இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன ! இனி அடுத்த தலைமுறை இளைஞர்களும் விவசாயத்தை நோக்கி படையெடுப்பார்கள் ! முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

டிஆர்பி ராஜா கலகல
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டிஆர்பி ராஜா கலகலப்பாக பேசக் கூடியவர். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் ஆர்வமுள்ளவர். அரசியல்வாதி என்றாலே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற நிலையை சில எம்எல்ஏக்களும் எம்பிக்களும் பேண்ட் அணிந்து மாற்றியுள்ளனர்.

வெள்ளை வேட்டி
அது போல் விவசாயிகள் என்றால் வெள்ளை வேட்டியுடன்தான் இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி டக் இன் செய்த பேன்டுடன் கழுத்தில் பச்சை துண்டை அணிந்து புதிய ஸ்டைலை ராஜா உருவாக்கிவிட்டார். இவரது ட்வீட்டிற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் பதில் அளித்துள்ளனர்.

கொரோனா காலம்
அதில் ஒருவர் அண்ணா கொரோனா காலத்திலேயே படித்த இளைஞர்கள் விவசாயத்துக்கு வந்துவிட்டார்கள் நம் தலைவரின் பட்ஜெட் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் நன்றி முதல்வரே என்கிறார்.

பந்தாவா புல்லட்
வாத்தியாரே நம்ம ஸ்டாலின் பெட்ரோல் விலையை குறைச்சிட்டாரு, இனிமே நாம இந்த சைக்கிளை தூக்கி போட்டுட்டு பந்தாவா புல்லட்டுல போவோம்!

அதிகாரிகள் வாங்கும் சம்பளம்
முதலமைச்சர் ஆணையை அதிகாரிகள் அவர்கள் வாங்கும் சம்பளத்தை உணர்ந்து கடமை உணர்வுடன் செய்ய வேண்டும், ஒரு விவசாயி இவர்களை அணுகும் போது தகுந்த மரியாதை கொடுப்பதில்லை, ஒருவகை அலட்சியம் செய்கிறார்கள். அதிகாரிகள் Friendly approach உடையவர்களாக இருந்தால் பேண்ட் போட்டவர்களும் விவசாயம் செய்வர் என்கிறார் ஒரு வலைஞர்.
அதான் உங்க உயரத்துக்கு இருக்கிற பனைமரத்தை வெட்டகூடாது அறிவுப்பு வரும் போதே தெரியும் சார். தாறுமாறு தக்காளி சோறு என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications