நோ சீட்டு; ஒன்லி ஓட்டு! மனக் கசப்பில் மனித நேயம்? வேதனையில் வேல்முருகன்!
திமுக கூட்டணியில் இந்த முறையும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. கடந்த 2019இல் இதே போல் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

ஆனால், இந்த முறை கட்டாயம் 1 தொகுதி கிடைக்கும் எனக் கடைசிவரை காத்திருந்தார் ஜவாஹிருல்லா. ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை.
கடந்த 13 நாள்களுக்கு முன்னதாக திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்த ஜவாஹிருல்லா, 'எங்களின் கோரிக்கை நியாயமானது’ என்று திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் உள்ளவர்கள் சொன்னார்கள். எனவே நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்று சொல்லி இருந்தார்.
உடனே செய்தியாளர்கள் இந்த முறையும் சீட்டு கிடைக்கவில்லை என்றால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்? என்றார்கள். அப்படியான அறிவிப்பு வரட்டும். அதன்பின்னர் இதற்குப் பதில் சொல்கிறேன் என்றார். அவரது நம்பிக்கை பலிக்கவில்லை.

இந்த முறையும் திமுக கைவிரித்துவிட்டது. 2019இல் தொகுதி ஒதுக்கப்படாதது குறித்துப் பேசிய ஜவாஹிருல்லா 'திமுக தொகுதி வழங்காதது எங்கள் கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.
வழக்கம் போல் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியை வழங்கி உள்ளது திமுக. அந்தக் கட்சி இந்தியாவில் பழமையான கட்சி. முஸ்லிம் மக்களின் நலனுக்காக உருவான முன்னோடிக் கட்சி. காயிதே மில்லத் அதன் முகமாக இருந்தார்.
ஆகவே, மு.கருணாநிதி காலம் தொட்டு மு.க.ஸ்டாலின் காலம் வரை ஒரு சீட்டு என்பது முஸ்லீம் லீக் கட்சிக்கு உறுதியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. அது அகில இந்தியக் கட்சி.

அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து அல்லது தனிப்பட்ட வகையில் இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு என்று பல கட்சிகள் உருவாகி விட்டன. அதில் பாதி கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகள் என்று சொல்லலாம்.
ஆனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்பதிலிருந்து மனிதநேய மக்கள் கட்சியாக அரசியல் உருவெடுத்த மமகவுக்கு முஸ்லிம் லீக்கைவிட தமிழ்நாட்டில் அதிக தொண்டர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு நகரத்திற்கும் கிளைக்கும் அக்கட்சிக்குத் தொண்டர்கள் செல்வாக்கு உள்ளது. அதைப்போலத்தான் எஸ்டிபிஐ. இந்த இரண்டு கட்சிகளிலும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

சொல்லப்போனால் முஸ்லீம் லீக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் தொண்டர்கள் இருக்கிறார்களா? என்பதே சந்தேகம் தான். எஸ்டிபிஐ அப்படி அல்ல. மதுரையே குலுங்கும் அளவுக்கு ஆட்களைத் திரட்டும் சக்தி உள்ள கட்சியாக உள்ளது.
அதைப்போன்றே மமகவும் தொண்டர் செல்வாக்கை அதிகம் பெற்றுள்ள கட்சி. இருந்தும் அதற்கு திமுக அணி தொகுதி ஒதுக்கித் தருவதற்குத் தயங்குகிறது.
மக்கள் செல்வாக்கே இல்லாத ஐஜேகே கட்சிக்கு திமுக கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 1 தொகுதியை அளித்தது. அப்படி உள்ளபோது அசுர பலம் கொண்ட மமகவுக்கு சீட்டுத் தரவில்லை. அதை வழக்கம் போல் மமக ஏற்றுக் கொண்டுள்ளது.
திமுக கூட்டணியில் 2014இல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. அக்கட்சி தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் எம்.பி சீட்டு அந்தக் கட்சிக்கு வழங்கப்படவே இல்லை. 2013 முதல் திமுக கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்று வந்துள்ளது.

அதன் அடையாளமாக 2021 சட்டசபையில் 2 சீட்டுகளை திமுக கொடுத்தது. அந்த. 2 வெற்றி பெற்றது. சட்டசபையில் மட்டும் மமகவுக்கு பிரதிநிதித்துவம் இருந்தால் போதும் என திமுக தலைமை கணக்குப் போட்டுள்ளதாகவே தெரிகிறது.
சீட்டு தரவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று கண்டிப்பாகப் பேசிய ஜவாஹிருல்லா, சீட்டு ஒதுக்கவில்லை என்பது உறுதியானது அமைதியாகிவிட்டார்.
பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக மமக ஒருவேளை அமைதி காக்கலாம். ஆனால், ஒரு அரசியல் கட்சியாக ஐஜேகேவைவிட வலிமை உள்ள கட்சியாக மமக யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

இதேபோன்று பண்ருட்டி வேல்முருகனும் ஒரு சீட்டு எனக் குரலை உயர்த்தினார். மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே சட்டசபையில் சபாநாயகருடன் கொஞ்சம் உரசலை உண்டு பண்ணினார்.
சில வாரங்கள் சட்டசபையில் வேல்முருகனின் பேச்சுக்கள் திமுகவை உரசுவதைப் போல் இருந்தன. அதைவைத்து திமுக தரப்பின் கவனத்தை தன் பக்கம் கொஞ்சக் காலம் தக்கவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, மக்களவைத் தேர்தலில் நிற்பதற்குத் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஏன் திமுக ஒதுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். அதற்காகப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.
இதனால், திமுக அணிக்குள் சின்ன சலசலப்பு ஏற்பட்டது. திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் வேல்முருகனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடத் தயார் என்றும் அறிவித்தார் வேல்முருகன்.
ஆனால், அவருக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. கடந்த முறையும் இதே போல் முட்டி மோதினார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ஆனால், திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்த முறையும் வேல்முருகனும் ஜவாஹிருல்லாவும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இந்த இரண்டு கட்சிகளில் தமிழகம் முழுவதும் பலம் உள்ள கட்சியாக மமக உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது வேல்முருகனின் கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.
ஆகவே, இந்த இரண்டு கட்சிகளின் பலம் சார்ந்து நாம் ஒப்பிடவில்லை. சீட்டு தராமல் ஏமாற்றம் அடைந்த கட்சிகள் என்ற பட்டியலில்தான் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளோம்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications