தமிழ்நாட்டுக்கு “செக்”.. மகளிர் இடஒதுக்கீட்டில் பாஜகவின் உள்நோக்கம்! எச்சரிக்கும் ஜவாஹிருல்லா
சென்னை: ஒட்டுமொத்த தோல்விகளை மறைப்பதற்காகவே மகளிர் இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு பயன்படுத்துவதாக மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு தனது ஒட்டுமொத்தப் படு தோல்விகளை மறைக்கின்ற படுதாவாக மகளிர் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது . மகளிர் முன்னேற்றத்தின் மீது ஒன்றிய பாஜக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சியின் அந்திமக் காலம் வரை காத்திருந்திருக்காது.

2010 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்மொழிந்த இந்த மசோதாவிற்கு பாஜக அன்றே ஆதரவு தெரிவித்திருந்தால் இந்த மசோதா அப்போதே நிறைவேறியிருக்கும். நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நாட்டின் அமைதியைக் குலைத்து வேளாண் குடிகளை வேரோடு சாய்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
இஸ்லாம் மார்க்கமே 1400 ஆண்டுகளுக்கு முன் தடை செய்து விட்ட முத்தலாக்கை தானே தடைச் சட்டம் இயற்றித் தடுத்தது போல நாடகமாடியது. காஷ்மீரின் சிறப்புத் தகுதியை உறுதிப்படுத்தும் அரசியல் சாசனப் பிரிவு 370 ஐ ரத்து செய்து காஷ்மீரை மூன்றாகக் கூறு போட்டு வெறியாட்டம் நடத்தியது. அதனால் ராணுவத்தினர் உட்பட ஏராள மனித உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவையே கொந்தளிக்க வைத்தது. இவ்வாறு வேண்டாத சட்டங்களால் நாட்டில் வேதனை அலைகளை உருவாக்கிய ஒன்றிய பாஜக அரசு அப்போதெல்லாம் ஏன் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மருந்துக்கும் பேசவில்லை? இப்போது இந்தியா கூட்டணி பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்து வரும் வேளையில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற முக்காட்டைப் போர்த்திக் கொண்டு தனது மூர்க்கத்தனங்களை மறைக்க முயல்கிறது.

மானுடத்தின் சரிபாதியான மகளிருக்கு இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது. அதே நேரம் மகளிர் இட ஒதுக்கீட்டிலும் சமூகநீதி பேணப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனங்களைச் சார்ந்த மகளிருக்கு அதில் உள் ஒதுக்கீடு கண்டிப்பாக இருந்திட வேண்டும். இல்லையேல் சமூகநீதி அர்த்தமிழந்து போகும். தொகுதி மறுவரைக்குப் பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறைக்கப்படுவதையும் வடமாநிலத் தொகுதிகள் அதிகரிக்கப்படுவதையும் ஒரு போதும் ஏற்க இயலாது. மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications