“மனிதநேய மக்கள் கட்சியின் கட்சி பதிவு ரத்து சட்டவிரோதமானது.. நீதிமன்றத்தை நாடுவோம்”: ஜவாஹிருல்லா
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் கட்சி பதிவு ரத்து என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு சட்டத்திற்கு முரணானது என அக்கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறியதாக தமிழ்நாட்டில் 64 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது, ஆண்டுதோறும் வரவு - செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களால் இக்கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் 808 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் இருந்தாலும் அவர்கள் இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019 முதல் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி மனிதநேய மக்கள் கட்சி உட்பட 474 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த முடிவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29 ஏ பிரிவில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் இருக்கிறதே தவிரத் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29 ஏ ஐந்தாவது பிரிவில் ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்ற காரணங்களுக்காகக் கட்சியின் பதிவை ரத்து செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலில் நிற்காத காரணத்தினால் பதிவை ரத்து செய்வது என்பது முரணானது.
அரசமைப்புச் சட்டத்தின் 324 வது பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் அந்தப் பிரிவு தேர்தலை நடத்துவதற்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்கும் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் அந்தப் பிரிவில் இல்லை.
உச்சநீதிமன்றம் காங்கிரஸ் எதிர் இன்ஸ்டிடூட் ஆப் சோசியல் வெல்பேர் என்ற வழக்கில் 2002 மே 10 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்: 'ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்து தான் பிறப்பித்த உத்தரவை அக்கட்சி அரசமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது என்பதற்காகவோ தேர்தல் ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறிவிட்டது என்பதற்காகவோ அளிக்கப்பட்ட பதிவை மீளாய்வு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை' (பத்தி 41.2).
மனிதநேய மக்கள் கட்சி 2009 முதல் பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. பல்வேறு நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்தச் சின்னத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. பேரூராட்சி மன்றத் தலைவர்களாக எம் கட்சியினர் பணியாற்றி வருகின்றார்கள். ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்குகளை முறையாகச் செலுத்தி வருகிறோம். எனவே மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை ரத்து செய்யும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு விரோதமாகவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் இருக்கிறது. எனவே இது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவைப்படுமெனில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.
வெளிப்படைத்தன்மை உடைய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இந்திய அளவில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் அதிலிருந்து மடைமாற்றம் செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்து இருக்கிறதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications