ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்பு கேட்டவர் சாவர்க்கர்! மனிதநேய மக்கள் கட்சி விமர்சனம்!
சென்னை: 9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே'போராளி' சாவர்க்கர் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தியாகச் சுவரில் சாவர்க்கர் படம் இடம்பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாட்டின் 75வது விடுதலை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்திதிடலில் சக்ரா விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளார்.
சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர். இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே'போராளி' சாவர்க்கர் மட்டுமே.
நேதாஜி படைக்கு எதிராகப் படை கட்டியவர். தேச தந்தை காந்தியடிகளின்படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாவர்க்கர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியதற்காக அந்தமான் சிறையில்அடைக்கப்பட்டவர்கள் பலர் சித்ரவதைகளை அனுபவித்து அங்கேயே உயிர் நீத்தனர்.
ஆனால் அந்தமான் சிறையில் எல்லா வகையான சலுகைகளையும் அனுபவித்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி விடுதலை பெற்றவர் சாவர்க்கர்.
இதன் பிறகு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் சாவர்க்கர்.
புதுச்சேரி விடுதலைக்குச் சற்றும் தொடர்பில்லாதவர் சாவர்க்கர். அவரது பெயரைத் தியாகசுவரில் பதிப்பது என்பது வரலாற்றுத் திரிபு ஆகும். எனவே அவரது பெயர் எக்காலத்திலும் அங்குப் பதிவு செய்யப்படலாகாது. இந்த வரலாற்றுத் திரிபைக் கண்டித்துப் போராடியவர்கள்அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications