தமிழக அரசால் நிச்சயம் முடியும்! அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இதை செய்ய வேண்டும்! ஜவாஹிருல்லா யோசனை!
சென்னை: அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலும் தமிழக அரசு சிறுதானிய திருவிழாக்களை நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பேராசிரியருமான ஜவாஹிருல்லா யோசனை தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத் துறையை ஓர் முழுமையான பரிணாமத்துடன் அணுகி அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேன்படும் வகையில் அறிவிப்புகள் வெளிவந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வரலாற்றுச் சாதனை
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வேளாண் மக்களின் நல்வாழ்வை நாடும் அரசு என்ற அடிப்படையில், சென்ற ஆண்டு சிறந்த முன்னெடுப்புகளை எடுத்ததன் விளைவாக 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையான 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் அளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 3 லட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது மெச்சத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில்
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பல மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராகக் கொண்டு செல்வதற்கும், தேவையான நீர் கடைமடைப் பகுதியை அடைவதற்கும், இதனால் 2 லட்சம் ஏக்கர் பயன்பெறக்கூடிய அளவிற்கு 'சி' மற்றும் 'டி' வாய்க்கால்கள் 550 கி.மீ. நீளத்திற்கு தூர் வாரப்படும்" என்ற அறிவிப்பு குறுவை சாகுபடியில் மீண்டும் தமிழகம் சாதனைப் படைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னை வணிக வளாகம்
தஞ்சை மாவட்டத்தில் தென்னை வணிக வளாகத்தில், தென்னை மதிப்புக்கூட்டும் மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
முதலமைச்சரின் மானாவாரி நிலம் மேம்பாடு இயக்கம் மூலம் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3000 மானாவாரி நிலத்தொகுப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, வறண்ட நிலங்களுடைய உழவர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதாக அமையும்.

ஆரோக்கிய வாழ்விற்கு
ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது. இயற்கை வேளாண்மையில் ஆர்வமாக உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குவதற்காக 200 இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது.

சிறுதானிய உழவர்களுக்கு
2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் சிறுதானிய திருவிழா மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சாகுபடி முதல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது வரை சிறுதானிய உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிதி ஒதுக்கீடும் பாராட்டத்தக்கது. சிறுதானிய திருவிழாக்கள் தமிழக அரசால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அங்கக வேளாண்மை
அங்கக வேளாண்மை (Organic Farming) ஊக்குவிக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 ஹெக்டேர் அளவிலான தொகுப்புகள் மாவட்டத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. மின் இணைப்பு இல்லாத விவசாயிகளின் கிணற்றுப் பாசனத்திற்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு போற்றத்தக்கது. கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் 50 சதவிகித மானிய அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இரவு நேரங்களில் வயல்வெளிகளில் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்கும் சீறிய திட்டமாகும்.

தொலைநோக்குப் பார்வை
விளைபொருட்களில் எஞ்சிய பூச்சிக்கொல்லி அளவினை அறிந்து ஏற்றுமதி மேற்கொள்ள இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுமதி அளவை உயர்த்திட உதவும். உள்ளூர் பயிற்களையும், மாடுகளையும், ஆடுகளையும், கோழிகளையும் மீட்டெடுக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. பரந்துபட்ட பார்வையில் வேளாண்மையை அணுகி, வேளாண் சார்ந்த அனைத்து அங்கங்களும் மேன்மையடைய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வேளாண் நிதி நிலை அறிக்கையை மனிதநேய மக்கள் கட்சி உளமார வரவேற்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications