பெரிய "திருப்பம்" வரும் போலயே.. மொத்தமாக கைமாறும் வாக்குகள்.. கேம் சேஞ்சராக போகும் 2 கட்சிகள்!?
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணி மற்றும் சிறிய கட்சிகள் பெரிய கேம் சேஞ்சராக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. நேற்று டைம்ஸ் நவ்- சிவோட்டர் மூலம் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் இது தொடர்பான முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
டைம்ஸ் நவ்- சிவோட்டர் சார்பாக நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் கருத்து கணிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் கருத்துக்கணிப்பு படியே 100க்கு 100 சதவீதம் தேர்தல் முடிவுகள் வராது என்றாலும் கூட, இந்த கருத்து கணிப்பை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிக முக்கியமானதாக பார்க்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில்.. இந்த கருத்து கணிப்பை வைத்து தங்களின் தேர்தல் யுக்திகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கட்சிகளுக்கு கிடைத்து இருக்கிறது. முக்கியமாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூடுதல் இடங்களை பெறுவதற்கான முயற்சிகளை இனி தீவிரப்படுத்தும்.

என்ன சொல்கிறது
டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே கருத்து கணிப்பின்படி சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதிமுக அணிக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக- பாஜக அணிக்கு 32.1% வாக்குகள் கிடைக்கும் என்று டைம்ஸ்நவ் சர்வே கூறுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகள் பெற்றிருந்தது

திமுக
திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43.2% வாக்குகள் கிடைக்கும் என்று இதில் கூறப்பட்டுள்ளது . 2016 தேர்தலில் திமுக கூட்டணி 39.4% வாக்குகள் பெற்றது. இது போக மக்கள் நீதி மையத்துக்கு 7.1% வாக்குகள் கிடைக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 6.5 வாக்குகள் கிடைக்கும். மற்ற கட்சிகளுக்கு 11.1% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்குகள்
இந்த நிலவரப்படி மநீம, அமமுக, மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் சேர்த்து 25% வாக்குகளை பெற போகிறது. 25% வாக்குகள் என்பது கண்டிப்பாக தேர்தலில் முடிவுகளை மாற்றும் சக்தி கொண்ட வாக்குகள் ஆகும். இடங்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் மநீம 7, அமமுக 5, மற்ற கட்சிகள் 5 இடங்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இடங்கள் என்று பார்த்தால் வெறும் 17 இடங்கள்தான்.

நிலவரம் என்ன
ஆனால் 25% வாக்குகள் என்பது திமுக - அதிமுகவிற்கு இடையே முடிவை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். மநீம, அமமுக, ஆகிய 2 கூட்டணிகள் மட்டும் 13.6% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் யாரின் வாக்குகளை பிரிக்கிறார்கள் என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யாருடைய வாக்குகள்
அதாவது அதிமுகவின் வாக்குகளை இவர்கள் பிரிக்கிறார்களா அல்லது திமுகவின் வாக்குகளை இவர்கள் பிரிகிறார்களா என்று தேர்தலின் போதே தெரியும்.தற்போதைய நிலவரப்படி திமுகவிடம் அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதாக சர்வே சொல்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில்தான் உண்மையில் வாக்குகள் எந்த பக்கம் செல்லும், யார் "குட்டையை" குழப்ப போவது என்பதெல்லாம் தெரிய வரும்.

குழப்பம்
கருத்து கணிப்புகள் எப்போதும் 100% உண்மையாக வர வாய்ப்பே இல்லை. ஒரு சில தொகுதிகள் மாற்றம் ஏற்படும். இதனால் மநீம , அமமுக ஆகிய இரண்டு கட்சிகள் கூடுதல் இடங்களை பெற்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதிலும் மூன்றாவது கூட்டணியை மநீம பெரிதாக உருவாக்கி வருவதால் அந்த கட்சியின் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications