போலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு
சென்னை: காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்க வேண்டும் என்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவை வரவேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம். பெரும்பாலும், சனிக்கிழமை அல்லது ஞாயிறுகளில் விடுப்பு வழங்கப்படும்.

அத்தியாவசிய துறைகளில் பணிபுரிவரக்ளாக இருந்தால், சுழற்சி முறையில் வாராந்திர ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு போலீசாருக்கு மட்டும் வார விடுப்பு என்பது இல்லாமலேயே இருந்தது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி-இன் இந்த உத்தரவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சைலேந்திரபாபுவின் இந்த உத்தரவை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவலர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த உத்தரவை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications