சென்னை, புறநகர் பகுதிகளில் லேசான மழை.. புத்தாண்டு பிறந்தவுடன் மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில் இரு புயல்கள் வந்துவிட்டன. அதில் புரேவி புயல் நல்ல மழையை கொடுத்தது.

இந்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை முகப்பேர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், சென்ட்ரல், அம்பத்தூர், அண்ணா நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
அது போல் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், தாம்பரம், முடிச்சூர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. மார்கழி மாதம் குளிர் நிலவி வரும் நிலையில் தற்போது மழையால் குளிர்ச்சியான சூழல் உள்ளது. இது போல் நேற்று முன் தினமும் மழை பெய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேல் கன மழை பெய்தது. செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆத்தூர், வல்லம், திம்மாவரம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், ஆலப்பாக்கம், மெய்யூர் சிங்கபெருமாள்கோவில், உள்ளிட்ட பகுதியில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் திடீரென ஒருமணி நேரமாக மழை பெய்தது.

இதனால் கடும் குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புத்தாண்டு துவக்கத்திலேயே மழை பெய்வதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications